ரஜினிகாந்த் பற்றி தவறாக பேசினால் நிச்சயம் தட்டிகேட்பேன்: ராகவா லாரன்ஸ்

ரஜினிகாந்த் பற்றி தவறாக பேசினால் நிச்சயம் அதனை தட்டிகேட்பேன் என நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். \r\n\r\nநடிகர் ரஜினிகாந்த் 70வது பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில் சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் ரஜினி ரசிகர்கள் அன்னதான நிகழ்ச்சி ஏற்பாடு செய்தனர். இதில் நடிகர் ராகவா லாரன்ஸ் கலந்து கொண்டார். \r\n\r\nபின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ராகவா லாரன்ஸ், ரஜினிகாந்த்தை பற்றி தவறாக பேச வேண்டாம் என்று தாம் தர்பார் இசை விழாவில் கூறியதாகவும், தமக்கு அரசியலில் எதுவும் தெரியாது என்றும் தெரிவித்தார். மேலும் விவாத நிகழ்ச்சிகளில் யாராவது கத்தி பேசினாலே சேனலை மாற்றி விடும் தம்மை ஏன் சிலர் தாக்குகிறார்கள் என்று தெரியவில்லை என்றும் ராகவா லாரன்ஸ் கூறினார். – Download :

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started